டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி மரணமடைந்ததால் ஆத்திரம்: சுகாதாரமற்ற கழிவறையை இடிக்க திரண்ட பொதுமக்களால் பதற்றம்

டெங்குக் காய்ச்சலை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், கோவையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிகிச்சை பலனின்றி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கோவையில் மேலும் ஒரு சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கோவை கணபதியை சேர்ந்த காதார் பாட்ஷா என்பவரது மகள் தாஜ் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்நிலையில்,  சிறுமியின் வீட்டின் அருகே உள்ள பொது கழிப்பிடம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாலும், மழை நீர் தேங்கியே இருப்பதால் டெங்கு கொசு உற்பத்தியாகி அதனாலேயே சிறுமி உயிரிழந்திருப்பதாக கணபதி பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், சிறுமி பலியானதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சுகாதாரமற்ற முறையில் கிடந்த, கழிவறையை இடிக்க முயன்றனர்.



இது குறித்து தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று திரண்டிருந்த மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், ஒரு வார காலத்திற்குள் சுகாதாரமின்றியும், யாரும் உபயோகப்படுத்தாமல் இருக்கும் கழிவறையை இடித்து அகற்றுவதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் கணபதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் டெங்கு பீதி சற்றே ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள், டெங்குவை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...