மகாராஷ்டிரா மரம்நடு மாநாட்டில் நதிகளை மீட்போம் பேரணி பங்கேற்பு

மகாராஷ்டிரா அரசு ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து ‘மரம்நடும் மாநாடு-2017’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

நதிகளை மீட்போம் பாரதம் காப்போம் பேரணியின் 15-ம் நாளான செப் 17-ம் தேதியன்று மும்பை ராஜ்பவனில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மஹாராஷ்டிரா அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 50 கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்த இம்மாநாட்டில் ஈஷா யோகாமைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், மஹாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர்ராவ், மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மகாராஷ்டிரா மாநில நிதி மற்றும் வனத்துறை அமைச்சர் சுதிர் முகாந்திவார், மகாராஷ்டிரா பழங்குடியினர் வளர்ச்சி மற்றும் வனத்துறை அமைச்சர் ராஜே அம்பரீஷ்ராவ் அற்றம், மகாராஷ்டிரா மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் பங்கஜ மண்டே, நடிகர் விவேக் ஓபராய், ஸ்ரீராம் குழுமத் தலைவர் அஜய்பிரமல், மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, யோகா நிபுணர் எச்.ஆர்.நாகேந்திரா, பழம்பெரும் நடிகை வஹீதாரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.



முன்னதாக ஜூலை 1ம் தேதி மஹாராஷ்டிராவில் 5.43 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டது. அன்று நதிகளை மீட்போம் இயக்கத்தின் பகுதியாக ஈஷா அறக்கட்டளை மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்திற்கிடையே மகாராஷ்டிராவின் நதிக் கரைகளில் மரங்கள் நடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றிக் கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செப்-17 ம் தேதியன்று மும்பை ராஜ்பவனில் நடந்த மரம் நடும் மாநாட்டில் சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், இந்த தேசத்தின் நலனுக்காக அயராது உழைக்கும் ஜக்கி வாசுதேவுக்கு தமது நன்றியை வெளிப்படுத்தியதுடன் ஜக்கி வாசுதேவ் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமது ஆதரவு நிச்சயம் உண்டு என்றும் கூறினார்.



மேலும் அவர் நாம் இந்த பூமிக்கு ஆக்கப்பூர்வமானவற்றை செய்ய வேண்டும். அது நமது தலைமுறையில் பலனளிக்கவில்லையெனினும் நமது சந்ததியினர் அதனால் நம்மை நினைவுகூறுவார்கள் என்றார். இந்த விழிப்புணர்வை அனைவருக்கும் கொண்டுசேர்க்கும் பொறுப்பை ஊடகங்கள் திறம்பட செய்ய வேண்டும் என்றார்.

2.82 கோடி மரக்கன்றுகளை நடவு செய்ததற்காகவும், 50 கோடி மரக்கன்றுகள் நட உறுதி மேற்கொண்டதற்காகவும் மஹாராஷ்டிரா அரசாங்கத்தை பாராட்டினார். மேலும் அவர், நாம் மரக்கன்றுகள் நடுவதோடு மட்டும் விட்டுவிடாமல் அவை இறந்து விடாமல் அவற்றை செம்மையாக வளர்க்க வேண்டும். இந்த அறையில் இருக்கும் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலுக்கும் நம் அன்னை பூமிக்கும் பாதுகாவலராக ஆக வேண்டும் என்றார்.

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் பேசுகையில், நதிகளை மீட்கும் இந்த திட்டத்தை தங்களுக்கு அளித்ததற்காக ஜக்கி வாசுதேவ்க்கு தமது பாராட்டுகளை தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் நதிகளை மீட்போம் இயக்கத்தில் திறம்பட பங்கேற்பதோடு இந்த திட்டம் வெற்றிகரமாக நடக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். 

மேலும் இந்த இயக்கம் ஜக்கி வாசுதேவின் நோக்கம் அல்ல. இது ஜக்கி வாசுதேவ் நம் அனைவருக்கும் அளித்திருக்கும் நோக்கம். இந்தத் திட்டத்தில் மகாராஷ்டிரா அரசு முன்னணியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்றார். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் முனைப்புடன் மரக்கன்றுகள் நடவுசெய்து கொண்டிருக்கும் அம்மாநில வனத்துறை அமைச்சரை பாராட்டினார்.

இதனைத்தொடர்ந்து, ஜக்கி வாசுதேவ் பேசுகையில், தமிழகத்தில் ஈஷா பசுமை கரங்கள் திட்டத்தின் செயல்களை விளக்கினார். தமிழகத்தின் பசுமை போர்வையை 16.5 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்த 11.4 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும். இதற்கு ஈஷா பசுமை கரங்கள் திட்டம் செயல்புரிந்து கொண்டிருப்பதையும் இத்திட்டத்தின்மூலம் இதுவரை தமிழகத்தில் 3.2 கோடி மரங்கள் நடவு செய்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.



Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...