அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டது ரத்து- பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரு துருவங்களாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் அண்மையில் இணைந்தனர். இதையடுத்து, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்காக அதிமுக பொதுக்குழுவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டினர்.

இதனைத்தொடர்ந்து, பொதுக்குழுக் கூட்டத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை, அதிமுக நிர்வாகிகள் செய்தனர். இதில் மொத்தம் 2130 பேர் பங்கேற்றனர். வழக்கமாக பொதுக்குழு, செயற்குழுவில் உறுப்பினர்களாக இல்லாதவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்படுவர். ஆனால், இன்று நடைபெற்றக் கூட்டத்தில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா மற்றும் துணைப் பொதுச் செயலாளராக இருந்த டி.டி.வி.தினகரன் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.

மேலும், தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது என அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தீர்மானங்கள் வருமாறு:-

1. இரட்டை இலை சின்னத்தை மீட்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

2. ஜெயலலிதா நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அந்தந்த பதவிகளில் நீடிப்பார்கள்.

3. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் அரசுக்கு பாராட்டு, விழா தொடர்ந்து நடக்கும்.

4. ஜெயலலிதா நினைவிடத்திற்கு ரூ.15 கோடி ஒதுக்கிய அரசுக்கு நன்றி.

5. வார்த் புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு.

6. தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது.

7. உள்ளாட்சி தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் வெற்றிக்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

8. சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து.

9. ஜெயலலிதாவிற்குப் பின் கட்சியில் பொதுச் செயலாளர் யாரும் கிடையாது. அவர் தான் நிரந்தர பொதுச் செயலாளர் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...