பழைய ஆயக்கட்டின் பாசனத்திற்கு ஆழியாறு அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு


கோவை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பழைய ஆயக்கட்டின் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :-  கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டின்  ஒரு போக பாசனத்திற்கு, நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து 10.09.2017 (நாளை) முதல் 08.01.2018 முடிய 120 நாட்களுக்கு மொத்தம் 800 மி.க. அடிக்கு மிகாமல் ஆழியார் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

மேலும், நஞ்சை பாசனத்திற்கு ஆழியாறு அணை பழைய ஆயக்கட்டு விவசாயிகள் பயன்பெறும் வகையில் 5 வாய்க்கால்களில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இதனால், 6,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

ஆழியாறு, கோட்டூர், ஆனைமலை ஆகிய பகுதிகளுக்குட்பட்ட விவசாயிகள் நெல் பயிரிடுவதற்கு ஏதுவாக இந்த தண்ணீர் திறப்பு அமையும். இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு விவசாயிகள் பயனடைய வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...