நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வினால் உயிரிழந்த மாணவி அனிதா-விற்கு நியாயம் கோரியும் கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தற்போது வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கோவை சட்டக் கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினர் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், நீட் தேர்விற்கு தமிழகத்தில் விலக்களிக்கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதனால், சட்டக் கல்லூரி வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது.