குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ரூ.5 கோடியே 31 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் மேலூர் ஊராட்சிக்குட்பட்ட நெடுகல்கம்பை பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 100 மீட்டர் தடுப்புச்சுவர் பணியினையும், ரூ.5 லட்சம் மதிப்பில் 200 மீட்டர் நடைபாதை அமைக்கும் பணியினையும், அதே பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையத்தினையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.



மேலும் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தைமலை கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், தைமலை முதல் அம்பேத்கர் நகர் வரை ரூ.20 லட்சம் மதிப்பில் 1.1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், பிரதான் மந்திரி கிராம சதக்யோஜனா திட்டத்தின் கீழ் ஆடர்லி முதல் செம்புகரை வரை ரூ.4.23 கோடி மதிப்பில் 4.1 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்று வரும் சாலை பணியினையும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேலூர் ஒசாட்டி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும், தாய்திட்டத்தின் கீழ் ரூ.23.990 லட்சம் மதிப்பில் சிங்காரா பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரம் வரை முடிக்கப்பட்டுள்ள சாலை பணியினையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எடப்பள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சத்துணவு கூடத்தினையும், தாய்திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பில் உபதலை பகுதியில் முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட காரக்கொரை பகுதியில் ரூ.14.00 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள சாலைபணியினையும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின்னர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் பசுபதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...