அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது எனக் கூறுவது ஆளுநரின் பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என துரைமுருகன் பேட்டி


அதிமுக எம்.எல்.ஏக்கள் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ள நிலையில் உட்கட்சி தகராறு அதில் தலையிட முடியாது என கவர்னர் சொல்லி இருப்பது அவருடைய பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என திமுக சட்டமன்ற எதிர் கட்சித்துணை தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் திமுக சட்டமன்ற எதிர் கட்சித்துணை தலைவருமான துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அதிமுகவில் உள்ள 19 எம்.எல்.ஏக்களும் தனி தனியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கடிதம் கொடுத்துள்ளனர் எனவும், ஒ.பி.எஸ் தலைமையில் 9 எம்.எல்.ஏக்கள் வெளியேறிய போது மெஜாரிட்டியை நிருபிக்க வேண்டும் என தெரிவித்த ஆளுநர் தற்போதைய சூழ்நிலையில் 19 எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள நிலையில் இது உட்கட்சி தகராறு தலையிட முடியாது என சொல்லி இருப்பது அவருடைய பொறுப்புக்கும் பதவிக்கும் உகந்ததல்ல என தெரிவித்தார்.

ஆளுநர் மெளனம் சாதிப்பதற்கு உள்நோக்கம் எதுவும் இருக்கின்றதா என்பதை அவரிடம் கேட்க வேண்டும் என தெரிவித்த அவர், மத்திய அரசின் தலையீடு இல்லாமல் ஆளுநர் செயல்பட மாட்டார் எனவும் தெரிவித்தார். ஆளுநர் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என தெரிவித்தவர் தனக்கு கவர்னர் மீது இன்னமும் நம்பிக்கை இருப்பதாக துரைமுருகன் தெரிவித்தார்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...