மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை சுத்தம் செய்து மாநகராட்சியின் பெயர் பலகை வைப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோயம்புத்தூர்; 4 மண்டலங்களில் 2.54 ஏக்கர் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்கள் சுத்தம் செய்து மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட, வீரகேரளம் கிராமம், வார்டு எண்.18, டாட்டா நகர் பகுதியில் உள்ள 48.13 சென்ட் பரப்பு அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் ஆக்கிரமிக்கப்பட்ட மீன் மார்க்கெட் இடித்து அப்புறப்படுத்தி மாநகராட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டது.

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.35, காளப்பட்டி, அய்யாசாமி நகர், பகுதியில் உள்ள 40 சென்ட் பரப்பும், வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி, வார்டு எண்.28 பி ரூ டி நகர் பகுதியில் உள்ள 106 சென்ட் பரப்பும் மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட சுண்டக்காமுத்தூர், வார்டு எண்.90 முல்லை நகர் பகுதியில் உள்ள 60 சென்ட் பரப்பும், ஆகமொத்தம் 2.54 ஏக்கர் பரப்பளவிலான பொது ஒதுக்கீடு பகுதிகள், சுத்தம் செய்து, மாநராட்சி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சியின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவில் அமையும் பொது ஒதுக்கீடு இடங்கள் சம்பந்தமாக, உரிய ஆய்வு செய்து தொடந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர்க்கு, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...