ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதூர்த்தி தினத்தன்று இஷ்ட தெய்வமான விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து பூஜித்து வழிபடுவது மரபு. இந்த ஆண்டும் விநாயகர் சதூர்த்தியை கொண்டாட பொதுமக்கள் தயாராகிவருகின்றனர்.

வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதூர்த்திக்கு பலரும் சிலை வாங்கி பிரதிஷ்டை செய்ய துவங்கியுள்ளனர்.
இவ்வாண்டு விநாயகர் சதூர்த்தியை, தமிழ் மக்கள் பெற்ற வெற்றியோடு கொண்டாடும் விதமாக ஜல்லிக்கட்டு விநாயகர் உருவத்தை வடிவமைத்திருக்கிறார் சிலை வடிவமைப்பாளர் சரவணக்குமார்.

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் அதே பகுதியில் சிலை வடிவமைக்கும் தொழில் செய்து வருகிறார். வம்சாவழியாக சிலை வடிவமைக்கும் தொழில் செய்து வரும் சரவணக்குமார் ஆண்டு தோறும் புதிய வடிவில் விநாயகர் சிலை வடிவமைத்து அசத்தி வருகிறார். கடந்த ஆண்டு பாகுபலி திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு கையில் பிரம்மாண்ட கதையுடன் விநாயகர் சிலையை வடிவமைத்து காண்போரை வியக்க வைத்தார்.

அதே போல், தமிழக மக்கள் போராடி வெற்றி கண்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளார். துள்ளி குதிக்கும் காளையை விநாயகர் கட்டி அணைக்கும் விதமாக அச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சரவணக்குமார் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் பரம்பரை பரம்பரையாக சிலை வடிவமைக்கும் தொழில் செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் விநாயகர் சிலை வடிவமைக்க எங்களுக்கு ஆர்டர்கள் வருகிறது. இந்த ஆண்டு கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளுக்கும், கேரளாவில் ஒரு சில இடங்களுக்கும் விநாயகர் சிலைகளை வடிவமைத்து அனுப்பியுள்ளோம். இந்த ஆண்டு 350 சிலைகளுக்கு ஆர்டர்கள் வந்துள்ளது.
ஆண்டு முழுவதும்
ஆண்டு முழுவதும் சிலை வடிவமைப்பதே எங்கள் தொழில். அப்பொழுதுதான் விநாயகர் சதூர்த்தி-க்கு முன்பாக அனைத்து சிலைகளையும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியும். 2 இன்ச் முதல் 12 அடி வரையில் விநாயகர் சிலை தயாரித்து வருகிறோம். முழுக்க முழுக்க இயற்கைக்கு பாதகம் ஏற்படுத்தாத வகையில் சிலைகளை வடிவமைப்பதே எங்கள் நோக்கம். கிழங்கு மாவு, ஓடைக்கல் மாவு மற்றும் காகித கூழ் பயன்படுத்தி சிலை தயாரித்து வருகிறோம். கடந்த ஆண்டு விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தும் வகையில், விவசாயி விநாயகர் தயாரித்தோம். மேலும், பாகுபலி, ஸ்ரீரங்கம், சத்ரபதி சிவாஜி ஆகிய விநாயர்கர்கள் தயாரித்தோம்.

ஜல்லிக்கட்டு விநாயகர்
உலகமே வியந்து பார்த்த தமிழக மக்களின் போராட்டத்தை விநாயகர் சிலையின் மூலமாக மீண்டும் நினைவுபடுத்த எண்ணினேன். அதன் விளைவாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விநாயகர் தயரித்துள்ளோம். 12 அடி உயரத்தில் மூன்று சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு வர்ணம் பூசும் பணிகள் அனைத்தும் முடிந்துள்ளது. விநாயகர் சதூர்த்தி தினத்தன்று டவுன்ஹால் தாமஸ் வீதியிலும், க.க.சாவடி பகுதியிலும், இடையர்பாளையம் பகுதியிலும் இந்த ஜல்லிக்கட்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அந்த பகுதிகளில் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு விநாயகரை தரிசிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழர் உணர்வோடு ஒன்றி உருவாக்கப்பட்ட ஜல்லிக்கட்டு விநாயகரை வணங்க காத்திருக்கலாமே..!