கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் மாநகராட்சி பொறியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்தல், மழை நீர் அறுவடை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துதல், புதியதாக எல்இடி தெருவிளக்குகள் பொறுத்துதல், நிலத்தடி வடிகால் இணைப்பு சம்பந்தப்பட்ட பணிகள் மற்றும் தேசிய நகர்புற சுகாதாரத்திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அனைத்து அலுவலர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, அனைத்து மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.