கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் புதிய அம்சங்கள் புகுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று (ஜூலை 3) திட்ட இயக்குநர் மருத்துவர் டி.எஸ்.செல்வவிநாயகம் தலைமையில் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தினை பற்றி கூறுகையில்.
தமிழக முதலமைச்சரின் வரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கும் குறைவாக இருக்கும் தமிழக மக்கள் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்.
இந்த திட்டத்தில் 1027 வகையான மருத்துவ சிகிச்சைகளுக்கு 752 அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம். இந்த திட்டத்தில் மருத்துவ சிகிச்சைகள் மட்டும் அல்லாமல் சோதனை முறைகள் மற்றும் தொடர் சிகிச்சைகளும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகின்றன.
மேலும், இதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, உட்செவிசுருள் பதியம், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மற்றும் செவி திறன் மூளை தண்டு கருவி பொருத்துதல் என 8 உயர் சிகிச்சை முறைகளும் அடங்கும்.
இப்பொழுது இந்த திட்டம் 5 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமான 6-வது ஆண்டில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் செயல்பாடு மற்றும் தரத்தை உயர்த்த இந்த திட்டத்தில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, பயனாளிக்கு குறுந்தகவல் மூலம் சிசி எண்ணை அனுப்புவதாகும்.
முதலமைச்சரின் விரவான காப்பீட்டு திட்டத்தின் பயனாளிகள் தங்கள் குறைகளை 1800 425 3993, என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். புகார் பதிவானதும் சிசி எண் அவர்களின் தொலைபேசிக்கு குறுந்தகவலாக (ஆநளளயபந) வரும்.
தற்பொழுது அழைப்பு மைய புகார் பதிவு முறையின் நிலைகள் என்னவென்றால் பயனாளி கட்டணிமில்லா தொலைபேசி எண்ணை அழைத்தல், அழைப்பு மைய ஊழியரால் புகார் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகிறது, புகார் பதிவு செய்யப்படுகிறது. சிசி எண் உருவாக்கப்படுகிறது. பளனாளிகள் புகார் பதிவானதும் சிசி எண் அவர்களின் தொலைபேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும். மற்றும் பயனாளி தங்களது புகார் பற்றிய நிலையை இந்த சிசி எண்ணை கோரி அறிந்து கொள்ளலாம்.

இக்கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பானுமதி, யுனைடெட் இன்சுரன்ஸ் தலைமை நிர்வாகி சிவக்குமார் உள்ளிட்ட காப்பீட்டு திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.