கோவை மாவட்டத்தில் 71-வது சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 71-வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், காவல் துறை சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்திடவேண்டும், சுதந்திரப்போராட்ட தியாகிகளை கௌரவிக்க தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான பயனாளிகளின் பட்டியலை விரைவாக தயார்செய்திட வேண்டும்.

மாநகராட்சியின் மூலம் விழா நடைபெறும் மைதானத்தை முன்னதாகவே சுத்தம் செய்திட வேண்டும். மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு தற்காலிக கழிப்பிடங்களை வைக்க வேண்டும் மேலும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பாக சுதந்திர தினவிழா நடைபெறும் வகையில் முன்னேற்பாட்டுப் பணிகளை செய்திட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகர காவல் துணை ஆணையர் லட்சுமி, உதவி பயிற்சி ஆட்சியர் சரண்யா ஹரி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்திரைத்தாள் சிதம்பரம், துணை ஆணையர் (கலால்) பாலசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, சின்னசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...