தமிழக நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ.167 கோடி மதிப்பீட்டில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக, குடிநீர் குழாய், தொலைத்தொடர்பு கேபிள் மற்றும் மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகள், ரோட்டோரமுள்ள மரங்கள், மேம்பாலப்பணிக்காக வெட்டப்பட்டு வருகின்றன. எனவே, நஞ்சப்பா சாலையில் பூங்கா நுழைவாயில் பகுதியில் உள்ள நடைபாதை கடைகள் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருப்பதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து மேம்பால பணிக்கு இடையூறாக இருந்த இந்த நடைபாதை கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நடைபாதை வியாபாரிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பில் நஞ்சப்பா ரோட்டில் உள்ள 125 நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் மாநகராட்சி மூலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி, மத்திய மண்டலம் பவர்ஹவுஸ் எதிரில் யார்டு ரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், சாலையோரத்தில் இருந்த 125 நடைபாதைக் கடைகளை காலி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகம் அளித்த நோட்டீஸை அடுத்து அக்கடைகளை வியாபாரிகள் கடந்த மார்ச் மாதம் காலி செய்தனர். தற்போது இந்த இடத்தில் நடைபாதை வியாபாரிகள், கடைகள் அமைக்க சிக்கல் ஏற்பட்டுள்ளதால், மாற்று இடம் தேர்வு செய்யக்கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.
முன்னதாக, இந்த வியாபாரிகளுக்கு மாற்று இடமாக, துடியலூர் பகுதியில் நடைபாதை கடைகள் அமைக்க மாநகராட்சி சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த இடத்தை நடைபாதை வியாபாரிகள் ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து கோவை, டாடாபாத் மின்வாரியம் அலுவலகம் அருகே கடைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் கடைகள் அமைக்கும் பணியில் நடைபாதை வியாபாரிகள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இதற்கு மின்வாரியம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. இதனால், நடைபாதை வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மண்டல உதவி நகரமைப்பு பிரிவு அலுவலரிடம் பேசுகையில்; கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம். நஞ்சப்பா சாலையில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க டாடாபாத் மின்வாரியம் அலுவலகம் அருகே கடைகள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இப்பகுதியில் கடைகள் அமைக்க மின்வாரியம் ஆட்சேபனை தெரிவித்துள்ளதால் நடைபாதை வியாபாரிகள் கடைகள் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாநகராட்சி ஆணையர் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.