டாஸ்மாக் கடையினை அகற்றக்கோரி பள்ளி சீருடையுடன் மாணவர்கள் போராட்டம்


கோவை ராஜாவீதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பள்ளி மாணவர்கள் சீருடை மற்றும் புத்தகப்பைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை ராஜாவீதி பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி, அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி சீருடை மற்றும் புத்தகப்பைகளுடன் வந்த மாணவ, மாணவிகள் டாஸ்மாக் கடை முன்பாக இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு அருகே செயல்படும் மதுபானக்கடையினால் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுவதாகவும், பள்ளி திறக்கும் முன்பாக அப்பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளுக்கு அருகேயுள்ள மதுபானக் கடையினால் மாணவர்களுக்கு குடிபழக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மதுகுடிப்பவர்களினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து டாஸ்மாக் கடையினை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...