ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக புகையிலை தினத்தை முன்னிட்டு டிஜிட்டல் விழிப்புணர்வு பென்டிரைவ் வெளியீடு

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவர் பி.குகன் தலைமையில் இயங்கும் ஸ்ரீராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புற்றுநோய் விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு கல்வியளித்து வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் தமிழகத்தின் தெற்கு, மேற்கில் உள்ள 6 மாவட்டங்களில் 1300-க்கும் மேற்பட்ட இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்களை தீபம் திட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள 27 கோடி புகைப்பிடிப்போரில் புகைப்பிடிப்பதாலும், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதாலும் ஏற்படும் புற்றுநோயால் 10 லட்சம் பேர் இறக்கின்றனர். புகைப்பிடிப்போருக்கும், புகையிலை பயன்படுத்துவோருக்குமிடையே மட்டுமின்றி பொதுமக்களிடையே வழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன்படி, இந்த ஆண்டு புற்றுநோய் எதிர்ப்பு வாசகம் "உங்களது நுரையீரலை சேதப்படுத்தாதீர்கள்" என்ற கருத்தின் அடிப்படையில் அமைத்துள்ளது. நுரையீரல் வடிவிலான பெண் டிரைவ், இந்தியாவில் முதல் முறையாக இதற்கென வெளியிடப்பட்டுள்ளது. புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்த அனைத்து விபரங்களுடனும் உள்ள இந்த டிஜிட்டல் விழிப்புணர்வு பெண் டிரைவ், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டது.

இதில், அனைத்து வகையான புற்றுநோய்கள், அவற்றின் ஒவ்வொரு படிகள், கண்டறிதல் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான வாய்ப்புகள் போன்றவை ஆங்கிலம் மற்றும் தமிழில் உள்ளன. "No Smoking"மொபைல்ஆப்-ஐ இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளாம். இதுவே, புகையிலை பழக்கத்திலிருந்து விடுபட வழிகாட்டும்.

இந்த ஆண்டு தீபம் திட்டம் இரண்டில் 2012- 2017 வரையில் இந்த நிறுவனம் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையும் இணைந்து நடத்திய வாய்ப்புற்று நோய் பரிசோதனை முகாமில் கிடைத்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 116 ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 136 தனிப்பட்ட முகாம்களில் 70230 பேரிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

பள்ளிகள், கல்லூரி மாணவர்கள் தொழிற்சாலைகளில் உள்ள பணியாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினால் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் மற்றும் ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இதற்கான பென்டிரைவ் இலவசமாக வழங்கப்படும் என மருத்துவர் பி.குகன் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த டிஜிட்டல் விழிப்புணர்வு பென்டிரைவ் திட்டத்தை கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயகுமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். எஸ்.என்.ஆர். டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் மற்றும் கதிர்வீச்சியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கார்த்திகேஷ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...