தமிழகத்தில் மலிவு விலை அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல் எனவும் தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டிய அளவை விட குறைந்த அளவு சிமெண்ட்டையே வழங்குவதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் இன்று கோவை வந்தார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் உட்பட முக்கிய நிர்வாகிகள் முதல்வரை வரவேற்றனர். பின்னர் முதல்வர் கார் மூலம் சேலம் சென்றார். பின்னர் அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வருகின்றது என்றார்.
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற 100 நாட்களில் எண்ணற்ற சாதனைகளை தமிழக அரசு நிகழ்ததி இருக்கன்றது என தெரிவித்தார்.மேலும் லாரிகள் மூலம் 6700 நடை குடிநீர் சென்னையில் உள்ள மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், தமிழகத்தில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் அரசு சிமெண்ட் கடத்தப்படுகின்றது என்பது தவறான தகவல் எனவும் தனியார் சிமெண்ட் நிறுவனங்கள் அரசுக்கு கொடுக்க வேண்டிய அளவை விட குறைவாகவே சிமெண்ட் வழங்குவதாகவும் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் உருவப்படம் திறப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் வேலுமணி,எதிர்கட்சிகளுக்கு தங்கள் குற்றப்பின்ணனி குறித்தும் தெரியும் எனவும் சட்டப்படி ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படும் என தெரிவித்தார்.