நுற்புழுக்களின் எண்ணிக்கையும் பொருளாதார சேத நிலை

தாவர நூற்புழுக்கள் மண் துகள்களுக்கு இடையே இருந்து கொண்டு தாவரத்தின் வேர்களில் இருந்து சாற்றை உறிஞ்சி உண்டு வாழ்வன. சாகுபடி நடைபெறாக் காலங்களில் இவை பிற சார் தாவரங்களான களைச் செடிகளின் வேர்களைச் சார்ந்தோ, உறக்க நிலைக்குச் சென்றோ தம் வாழ்க்கைச் சுழற்சியினைத் தொடர்கின்றன. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறைப் பேராசிரியர்கள் மா.சிவக்குமார் மற்றும் துறைத்தலைவர் ச. சுப்ரமணியன் ஆகியோர் கூறியதாவது:-

நூற்புழுக்களின் எண்ணிக்கையும் நூற்புழு இனங்களும் மகசூல் இழப்பினை நிர்ணயிக்கும் காரணியாகும். சாதாரணமாக ஒரு மி.லி மண்ணில் ஒரு நூற்புழுவுக்கு மேல் இருந்தால் பொருளாதார சேத நிலை ஏற்படும். ஆனால் வேரழுகல் நூற்புழு மற்றும் துளைப்பான் நூற்புழுக்கள் இந்த அளவினை விடக் குறைவாக இருந்தாலே பொருளாதார சேத நிலை ஏற்படும்.

தாவர நூற்புழுக்களைப் பொறுத்த அளவில் பெண் நூற்புழுக்களே பயிரைத் தாக்கிச் சேதம் விளைவிக்கக் கூடியவை. ஆண்புழுக்கள் பயிர்களைத் தாக்காது. மேலும் நூற்புழுக்களுக்கு ஊட்ட ஆதாரம் அதிகம் உள்ளபோது அதிகப் பெண்புழுக்கள் உருவாகும். ஊட்ட ஆதாரம் அதிகம் இல்லாத நிலையில் அதிக அளவு ஆண்புழுக்களும் குறைந்த அளவு பெண் புழுக்களும் உருவாகும் ஒரு நிலை தாவர நூற்புழுக்களுக்கு உண்டு. இதன் காரணமாகவே மண்ணில் உள்ள குறைந்த அளவு பெண் புழுக்கள் தம் வாழ்க்கைச் சுழற்சியைத் தொடர்கின்றன.

தாவர நூற்புழுக்களின் எண்ணிக்கை காரிப், ரபி ஆகிய பயிர்க்காலங்களில் அதிகமாகவும் கோடை காலங்களில் குறைந்தும் காணப்படும்.

நூற்புழுக்களுக்கு ஊட்டம் அளிக்கும் சார்தாவரங்களின் தரம், மண் அமைப்பு, மண் வெப்பநிலை, மண்ணில் உள்ள அங்ககப் பொருட்களின் ஆகியன நூற்புழுக்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் காரணியாகும்.

மண்ணில் உள்ள நூற்புழுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வழிமுறைகள்:-

மண்ணில் தொழு (வ) உரம் பிண்ணாக்கு வகைகள், கோழிஉரம், கரும்பாலைக் கழிவு, பசுந்தாள் உரம் போன்ற அங்கக இடுபொருட்களை அதிக அளவு இட்டு, மண்ணின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் மண்ணில் உள்ள தாவர நூற்புழுக்களைக் குறைக்கலாம். இவை கீழ்க்கண்ட வழிகளில் செயல்பட்டு நூற்புழுக்களைக் குறைக்கின்றன.

  • அங்ககப் பொருட்கள் மண்ணில் மட்கும் போது அபரிமிதமான வெப்பம் வெளிப்படுகின்றது. நூற்புழுக்களை அழிக்க இவ்வெப்பம் போதுமானது.
  • மண்ணில் இடும் உரப்பொருட்கள் மட்கும்போது ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் அங்கக அமிலம் போன்ற சில உபப்பொருட்கள் வெளியாகின்றது. இவை நூற்புழுக்களை அழிக்கின்றன.
  • வளர்சிதை மாற்றத்தின்போது வெளியாகும் உபப்பொருட்கள் மண்ணில் உள்ள நூற்புழு எதிரி உயிரினங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.
  • வேப்பம் பிண்ணாக்கு போன்ற சில அங்ககப் பொருட்களில் உள்ள வேதிப்பொருட்கள் இயற்கையாகவே நூற்புழுக்களைக் கொல்லும் தன்மை கொண்டவை.
  • அங்கக இடுபொருட்கள் மண்ணின் தன்மையை மேம்படுத்தி பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதன் காரணமாக தாவரத்தின் நூற்புழு எதிர்ப்புத்திறன் அதிகரிக்கின்றது.
  • மண் வளப் பாதுகாப்பிற்கு அங்கக இடுபொருட்களை அதிகமாக இடுவது நல்லது. இவை நூற்புழு எதிரி உயிரினங்களின் வளர்ச்சியை ஊக்குவித்து நூற்புழு மேலாண்மைக்கு வழிவகை செய்கின்றன.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...