கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!


கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருப்பிட மருத்துவ அலுவலரை தாக்கி செல்போனை பறித்து சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலராக செளந்திரவேல் பணிபுரிந்து வருகின்றார்.கடந்த 11ம் தேதி காரமடையை சேர்ந்த கிட்டான் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15ம் தேதி சிகிச்சை பலன் இன்றி  உயிரிழந்துள்ளார். உறவினர்கள் யாரும் உடனடியாக வராததால் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கிட்டானின் உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுருந்தது.



இந்நிலையில் இன்று அவரது உடலை வாங்குவதற்கு வந்த அவரது உறவினர்கள் தங்கள் உறவினரான கிட்டுசாமியின் உடலை தருமாறு கோரியுள்ளனர்.அப்பொழுது பெயரில் குழப்பம் ஏற்படவே உரிய சான்றிதழ் வாங்கி வரும்படி மருத்துவ அலுவலர் செளந்திரவேல் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து பத்திரிக்கை நிருபர் என கூறிக்கொண்டு வந்த கில்மோர் என்பவரும் அவருடன் வந்த சிலரும்,இருப்பிட மருத்துவ அதிகாரி சௌந்தரவேலுவிடம் வாக்குவாதம் செய்ததுடன்  தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன்  செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.இதனையடுத்து அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் ஒருவரை பிடித்து காவல் துறையில் ஓப்படைத்தனர்.

மேலும மருத்துவரை தாக்கி தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி மருத்துவமனை ஊழியர்கள் 
100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மருத்துவ அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மருத்துவமனை ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவலர்கள் வழக்குபதிவு செய்துள்ளனர். கில்மோர் அக்னிகதிர் என்ற பெயரில் பத்திரிகை நடத்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய நபர்களை பிடிக்க போலிசார் தீவிர நடவடிகை எடுத்து வருகின்றனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...