மலைகளின் அரசி என வர்ணிக்கப்படும் உதகையில் 121 வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த பின்னர் அங்கு நடைபெற்ற துவக்க விழாவில் பேசிய அவர்,மலைகளின் அரசியான நீலகிரிக்கு யாரும் மகுடம் சூட்டாத நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் மகுடம் சூட்டியதாகவும் பல்வேறு நல திட்டங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்தை வளர்ச்சியடைய செய்தவர் ஜெயலலிதா எனவும் புகழாரம் சூட்டினார்.மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது கொய்மலர் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதாகவும்,ரோஜா தோட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டதுடன் அவரால் கொண்டுவரப்பட்ட திட்டங்களையும் பட்டியலிட்டார்.
தொடர்ந்து நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர்கள் அர்ச்சுனன் மற்றும் கோபாலகிருஷ்னன் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று உதகை பேருந்து நிலையத்தை புதுப்பித்து நவீனப்படுத்த உடனடியாக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தார்.மேலும் நீலகிரி மாவட்ட மக்களுக்கு மேலும் பல புதிய சலுகைகளை வழங்க இந்த அரசு தயாராக இருப்பதாக கூறிய முதலமைச்சர்,முன்னாள் முதல்வர் பாணியில் பிறரை அழிக்க நினைத்து அழிந்த பக்தன் என்ற தலைப்பில் குட்டிக்கதை கூறியும் தன்னை யாரும் வளர்த்து விடவில்லை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே தான் வளர்ந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டுகளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது உதகை தாவரவியல் பூங்காவை சீரமைக்க 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பணிகள் விரைவில் துவங்கும் எனவும் கூறினார்.இன்று துவங்கி 3 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியில் 2 லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் விரைவில் தமிழக சட்டமன்றம் கூட்டப்படும் எனவும் தெரிவித்தார்.