கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன. தடாகம் ரோடு சவுடாம்பிகா நகரில் ஆறுமுகத்தின் மனைவி சாந்தி (57) வீட்டின் முன் நிறுத்திய பைக் நள்ளிரவு திருடு போனது தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இதேபோல் சரவணம்பட்டி மருதம் நகரில் சுரேந்தர் (28) வீட்டு காம்பவுண்ட் வெளியே நிறுத்திய பைக் இரவில் திருடு போனது தெரிய வந்தது. இருவரும் புகார் அளித்ததையடுத்து கவுண்டம்பாளையம் மற்றும் சரவணம்பட்டி போலீசார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Coimbatore: கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்படும் பைக்குகளை குறிவைத்து மர்ம நபர்கள் அடுத்தடுத்து திருட்டு செய்துள்ளதால், கவுண்டம்பாளையம் மற்றும் சரவணம்பட்டி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

கோவை தடாகம் ரோடு சவுடாம்பிகா நகர், சிவாஜி காலனி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி சாந்தி (57), இரவு நேரத்தில் தனது வீட்டின் முன்பு பைக்கை சாவியுடன் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். நள்ளிரவு 1.30 மணியளவில் வெளியே வந்து பார்த்த போது, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், அரியலூர் மாவட்டம் ராஜீவ் நகரைச் சேர்ந்த சாமிநாதன் மகன் சுரேந்தர் (28), கோவை சரவணம்பட்டி மருதம் நகர் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் தனது பைக்கை வீட்டின் காம்பவுண்ட் சுவர் வெளியே நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். மறுநாள் காலை 9 மணிக்கு எழுந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சுரேந்தர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...