செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இரு memu ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம்-போத்தனூர் ரயில் எண் 66615, கோவை வடக்கு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூர்-மேட்டுப்பாளையம் ரயில் எண் 66616, கோவை வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.52 மணிக்கு புறப்படும். இந்த மாற்றத்தை சேலம் கோட்டம், தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் அறிவித்துள்ளார்.
Coimbatore: கோவை – போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் இரண்டு மெமு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண். 66615 – மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமு ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து பிற்பகல் 1.05 மணிக்கு வழக்கம்போல் புறப்படும். ஆனால் செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்த ரயில் கோவை வடக்கு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த இரு தேதிகளிலும் கோவை வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து போத்தனூர் சந்திப்பு வரை ரயில் இயக்கப்படாது.
ரயில் எண். 66616 – போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில், வழக்கமாக போத்தனூர் சந்திப்பில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும். ஆனால், செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்த ரயில் கோவை வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.52 மணிக்கு புறப்படும். இந்த இரு தேதிகளிலும் போத்தனூர் சந்திப்பில் இருந்து கோவை வடக்கு ரயில் நிலையம் வரை இந்த ரயில் இயக்கப்படாது. கோவை வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இந்த மாற்றங்களை சேலம் கோட்டம், தெற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் அறிவித்துள்ளார்.