கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஆண்டாள் வீதியைச் சேர்ந்த ரவுடி ஆவி வினோத், அவரை கத்தியால் மிரட்டி ரூ.1,150 பணத்தை பறித்தார். திருடன் என பாண்டியராஜன் கூச்சலிட்டதும் கூடிய மக்களையும் கொலை செய்வதாக மிரட்டி தப்பிச் சென்றார். இதுகுறித்து ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி ஆவி வினோத்தை கைது செய்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் நீதிமன்றம் அனுப்பி சிறையில் அடைத்தனர்.
Coimbatore: புலியகுளம் ரோடு, பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள பாரில் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த வழக்கில் பிரபல ரவுடி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கோவை, புலியகுளம் ரோடு, பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 டூ 11 பார் அருகே புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலின் மகன் பாண்டியராஜன் (வயது 39) தங்கி, அந்த பாரில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் கோவை ஆண்டாள் வீதியைச் சேர்ந்த துரைராஜின் மகன், பிரபல ரவுடியான ஆவி வினோத் (35) அந்த பாருக்கு வந்தார். அவர் அங்குள்ள ஒரு மேஜை மீது ஏறி அமர்ந்து கொண்டு, பாண்டியராஜனிடம் பணம் தராமல் இலவசமாக உடனே மதுபானம் எடுத்து வந்து தருமாறு கேட்டு தகராறு செய்தார். அதற்கு பாண்டியராஜன், மேஜையில் இருந்து கீழே இறங்குமாறும், பணம் தராமல் மதுபானம் தர முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆவி வினோத், அங்கு இருந்த மற்ற ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் பாண்டியராஜனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், தான் புலியகுளம், அம்மன்குளம் ஏரியாவின் பெரிய தாதா என்றும், தன்னிடமே பணம் கேட்கிறாரா என்றும் பகிரங்கமாக மிரட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
இதையடுத்து பாண்டியராஜன் பார் வாசலில் நின்று கொண்டு இருந்த போது, அங்கு மீண்டும் ஆக்ரோஷமாக வந்த ஆவி வினோத், திடீரென பாண்டியராஜனின் சட்டைக் காலரை பிடித்து இழுத்தார். பின்னர் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டி பணம் கேட்டார். பாண்டியராஜன் பணம் தர மறுக்கவே, அவரது மேல் சட்டைப் பையில் வைத்திருந்த ரூ.1,150 ரொக்கப் பணத்தை வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டார்.
பாண்டியராஜன் திருடன் திருடன் என கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஆவி வினோத்தை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் கத்தியை சுழற்றி அனைவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதுகுறித்து பாண்டியராஜன் ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ரவுடி ஆவி வினோத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.