முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகள் பயணிகளின் வீடுகளுக்கு நேரில் விநியோகிக்கப்படும் - "கேஷ் ஆன் டெலிவரி" திட்டம் அறிமுகம்

இனி, முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகள் , பயணிகளின் வீடுகளில் நேரில் விநியோகிக்கப்படும் போது கட்டணம் செலுத்தும் வசதியை ரயில்வே நிர்வாகம் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, நெட்பேங்கிங், கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக கட்டணத்தை செலுத்தும் வசதி மட்டுமின்றி, டிக்கெட்டை பெறும்போது பணத்தை செலுத்தும், "கேஷ் ஆன் டெலிவரி" திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரி கூறியதாவது:- ஐஆர்சிடிசி இணையதளத்திலும், செல்லிடப் பேசி செயலியிலும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ரயிலில் பயணம் செய்ய விரும்பும் பயணி ஒருவர், டிக்கெட்டை மேற்கண்ட முறைகள் மூலம் முன்பதிவு செய்யும்போது இனிமேல் உடனடியாக கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, முன்பதிவின்போது பயணியால் அளிக்கப்படும் முகவரியில் டிக்கெட் நேரில் விநியோகிக்கப்படும்போது கட்டணத்தை அளித்தால் போதும். அந்த கட்டணத்தை ரொக்கமாகவோ, டிஜிட்டல் முறையிலோ அளிக்கலாம்.

முகவர், ரயில்வே கவுண்ட்டர் மூலம் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் முறையில் இருந்து பயணிகள் தாமாகவே இணையத்தில் முன்பதிவு செய்வதை ஊக்குவிக்க இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதியை பெறுவதற்கு, பணம் செலுத்துவதற்கான வழிகளில் ஒரேயொரு முறை மட்டும், டிக்கெட் வீடுகளில் நேரில் விநியோகிக்கும்போது கட்டணம் செலுத்தும் வசதி என்பதில் தங்களை சேர்க்க வேண்டும்.

இந்த வசதியை பெறுவதற்கு, வடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண் அல்லது பான் எண்ணை ஐஆர்சிடிசியில் பதிவு செய்திருக்க வேண்டும். 

ரூ.5 ஆயிரம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி மற்றும் ரூ.90 கட்டணமாக பெறப்படும். ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி மற்றும் ரூ.120 கட்டணமாக பெறப்படும். ஒருவேளை பயணிகள் முன்பதிவு டிக்கெட்டுகள், தங்களது வீடுகளில் விநியோகிக்கப்படும் முன் ரத்து செய்ய விரும்பினால், அதற்காக விநியோக கட்டணம், ரத்து செய்வதற்கான கட்டணத்தை தனியே அளிக்க வேண்டும் என்று ஐஆர்சிடிசி அதிகாரி தெரிவித்தார்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...