கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை வடவள்ளி பகுதியில் செல்போனில் பேசிக் கொண்டே மாடிக்கு நடந்து சென்ற இளைஞர் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கை வாசலை சேர்ந்தவர் விவேக் (33). இவர் கோவை வடவள்ளி பகுதியில் தங்கி ஜேசிபி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். சம்பவம் நடந்த நேரத்தில், விவேக் தனது மனைவி சிவரஞ்சனியிடம் செல்போனில் உரையாடிக் கொண்டிருந்தார்.




பேசிக் கொண்டே மாடிக்கு நடந்து சென்று கொண்டிருந்த விவேக், எதிர்பாராத விதமாக இரண்டாவது மாடியில் இருந்து சமநிலை இழந்து தவறி கீழே விழுந்தார். திடீரென நடந்த இந்த விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஓடிவந்து அவரை மீட்டனர்.




பலத்த காயம் அடைந்த நிலையில், விவேக்கை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மார்ச் 24ஆம் தேதி விவேக் பரிதாபமாக உயிரிழந்தார்.




இந்த சம்பவம் தொடர்பாக கோவை வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் கவனம் சிதறி நடப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

Newsletter

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...