திருஷ்டி பொம்மையால் வீட்டிற்கு என்ன பலன்? திருஷ்டி பொம்மைப் பற்றிய சுவாரசியம்

வீடுகளில் திருஷ்டி பொம்மை வைப்பது எதற்காக என்று பலருக்கு புரியாமலேயே அதனை நிறுவி வருகிறார்கள். கண்ணேறு, கண் திருஷ்டி என்று நம் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி சொல்வதை கேட்டு இருக்கிறோம். அப்படியென்றால் என்னவாக இருக்கும் என்று சில நேரம் கேள்விகள் நமக்குள் தோன்றியிருக்கும். அது குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்வோம்!



கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலே கண் திருஷ்டி என்பதாகும். கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும், இதுதான் முக்கியம். சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு.



குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது தான் திருஷ்டி. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.



ஒரு கட்டிட வேலை நடைபெறும் போது அங்குள்ள கண் திருஷ்டி பொம்மை பார்வையாளின் எண்ணத்தை சிறிது நேரமாவது மாற்றுப்பாதையில் செல்ல வைக்கிறது. இதனால் தொழிலாளிகளின் வேலைகள் தடையில்லாமல் நடக்கிறது. வயல்வெளிகளில் சோளக் கொல்லை பொம்மை வைப்பது இதற்காக தான். ஆனால் அதில் வேறு ஒரு பயனும் இருக்கிறது. தூரத்திலிருந்து பார்த்தால் வயல்வெளியில் யாரோ ஒரு மனிதன் நிற்பது போல் இருக்கும். இதனால் பயிரை மேய வரும் பறவைகளும், விலங்குகளும் சற்று யோசிக்கும். ஆகவே திருஷ்டி பொம்மைகள் எண்ணங்களிலிருந்தும், பொருள் சேதாரத்திலிருந்தும் நம்மை ஓரளவு பாதுகாக்கிறது.

திருஷ்டி பொம்மைகளின் நிலைப்பாடு என்ன என்பதை இவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்!



குஜராத் மாநிலத்தில் இருந்து குடுபத்துடன் வந்து இரண்டு வருடமாக கோவை குனியமுத்தூர் சாலை ஓரம் திருஷ்டி பொம்மைகள் தயாரித்து வருகின்றோம். தற்போது வட மாநிலத்தில் திருஷ்டி பொம்மைகளை விற்கும் கடைகள் அதிகமாக இருப்பதால் நாங்கள் இங்கு இடம் பெயர்ந்தோம். தென்மாநிலங்களிலும் திருஷ்டி பொம்மைகளின் வரவேற்பு நன்றாக உள்ளது. இங்கு நாங்களே திருஷ்டி பொம்மைகளை தயாரித்து வருகின்றோம். இதனை தயாரிக்க வெள்ளை சிமெண்ட், தேங்காய் நார் மற்றும் ஐந்து வகையான வண்ணங்கள் தேவைப்படுகிறது. தற்போது ஒரு மூட்டை வெள்ளை சிமெண்ட் 800 ரூபாயும், தேங்காய் நார் ஒரு கிலோ 250 ரூபாயுமாக விற்கப்படுகிறது. இதன்மூலம் செய்யப்படும் திருஷ்டி பொம்மைகள் நாங்கள் ரூபாய் 200 முதல் நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகின்றோம்.



அதுமட்டுமல்லாமல், திருஷ்டி பொம்மைகள் தயாரிக்கும் அச்சுக்களை போன்று மற்ற கடவுள்களின் உருவங்களை பொறித்தும் விற்பனை செய்கின்றோம். மேலும், மண் கலவை கொண்டு பூக்கள் வைக்கும் தொட்டிகள், யானை சிற்பி மற்றும் பல்வேறு வகையில் கடவுள் சிற்பங்களையும் செய்து வருகின்றோம். விநாயகர் சதுர்த்தி வரும் மூன்று மாதங்களுக்கு முன்பே விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியை தொடங்குவோம். தற்போது 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும் தயாரித்துள்ளோம். நாங்கள் விநாயகர் சிலைகள் 500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்கின்றோம். இதன்மூலம் எங்களது தொழிலில் எங்கள் குடுபத்திற்கு போதிய வருமானம் கிடைத்து வருகிறது என்றனர்.



Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...