கோவை 27வது வார்டில் அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூட்டம்: கோரிக்கைகள் கேட்டறிந்த திமுக செயலாளர் நா. கார்த்திக்

கோவை பீளமேடு 27வது வார்டில் உள்ள ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் திமுக செயலாளர் நா. கார்த்திக் கலந்துகொண்டு குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.


கோவை: கோவை பீளமேடு வார்டு எண் 27-ல் உள்ள "ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்பு" வளாகத்தில் அக்டோபர் 5 அன்று "ஆகாஷ் மல்லி அடுக்குமாடி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூட்டம்" நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா. கார்த்திக் கலந்து கொண்டார். அப்போது குடியிருப்போர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தனர். தார்ச்சாலை சீரமைப்பு, குப்பை மேலாண்மை, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.

குடியிருப்போரின் கோரிக்கைகளை கேட்டறிந்த நா. கார்த்திக், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் பீளமேடு பகுதி-1 திமுக செயலாளர் துரை.செந்தமிழ்ச்செல்வன், 27வது வட்டக் கழக துணைச் செயலாளர் சாந்தி நகர் அ. செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி ரமேஷ் குமார், வட்டக் கழகப் பொருளாளர் அங்கமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், திமுக கழக மூத்த முன்னோடிகளான மில் ரவி, கிருஷ்ணமூர்த்தி, புருஷோத்தமன், கங்குவார் சீனு, மதிவாணன் மற்றும் பல திமுக கழக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...