கோவை மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் கோவை மாநகராட்சியில் 100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் வரும் ஜூன் மாதம் 5ம் தேதி சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட உள்ளதால் மாநகராட்சி பகுதிகளில் 100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணி நடைபெற வேண்டும் என்ற குறிக்கோள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் ஒருபகுதியாக இன்று கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கோவை மாநகராட்சிப் பகுதிகளில் 100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் பணி குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் 100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரிக்க தேவையான உபகரணங்கள், வாகனம், பெட்டிகள் மற்றும் ஆட்கள் ஆகியவை போதிய அளவில் உள்ளனவா அல்லது பற்றாக்குறை உள்ள வார்டுகள் தங்கள் தேவைகளை தெரிவித்து செயல்திட்டம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மேற்கண்ட அனைத்து தேவைகளை நிவர்த்தி செய்து 100 சதவிகிதம் குப்பை தரம் பிரித்து வழங்கும் பணி மேற்கொள்ளவும் அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், பொறியாளர்கள், ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பணிபுரிந்து செயல்திட்டம் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...