நீர்த்தேக்கமாக காட்சியளிக்கும் உதகை பேருந்து நிலையம்- பொதுமக்கள் அவதி

தமிழத்தில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்று மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரான நீலகிரி, உதகை. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் உதகையின் எழில்கொஞ்சும் இயற்கை அழகைக்காக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வர். 

மேலும், தற்போது தமிழகத்தின் சமவெளிப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதாலும், கோடை விடுமுறை மற்றும் தற்போது மே தினத்தை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களுக்கு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளதாலும் பல்லாயிறக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு உட்பட்ட உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட நிலகிரியின் உதகை பேருந்து நிலையத்தின் சாலை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இந்த பேருந்து நிலையத்தின் சாலை கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் நிரம்பி ஏதோ குளம், குட்டை போல் காட்சியளித்து வருகிறது. இதனால், பேருந்து பயணிகள் நடப்பதற்கு பாதையின்றி பேருந்தில் ஏற சிறமப்பட்டு வருகின்றனர்.



மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த சாலையினை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...