கோவையில் 182வது அரசு பொருட்காட்சி துவக்கம்

கோவை மாவட்டம், மத்திய சிறைச்சாலை காவலர் அணிவகுப்பு மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையால் நடத்தப்படும் அரசுப்பொருட்காட்சி தொடக்கவிழா மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.



இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக சட்டப்பேரவைத் துணை தலைவர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

இவ்விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், அரசுப்பொருட்காட்சி ஆண்டுதோறும் கோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் நடத்தப்படுகின்றன.



கிராமம், மற்றும் நகர்புறு மக்கள் அரசுத்துறைகளின் திட்டங்களையும், சாதனைகளையும், அறிந்து கொள்ளவும், பொழுதுபோக்கு அம்சங்களை கண்டுகளிக்கவும் அரசுப்பொருட்காட்சிகள் வழிவகை செய்கின்றன. இந்தப்பொருட்காட்சியில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

45 நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நாடகங்களும், நலிந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளும் நாள்தோறும் நடைபெறவுள்ளன. மேலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மகிழும் வகையில் பல்வேறு பொழுபோக்கு அம்சங்களும் இந்தப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

எனவே, கோவை மாவட்ட மக்கள் அனைவரும் குடும்பத்துடன் வருகை தந்து இந்த பொருட்காட்சியை கண்டுகளித்து அரசின் திட்டங்களையும் சாதனைகளையும் அறிந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் அரசுப்பொருட்காட்சியினை திறந்து வைத்து பேசுகையில், தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம் கோவை. தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த மாநகரம் அங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது.

தொழில் வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் மேம்பட்ட மாநகரம் கோவை. கோவை நகரில் ஒன்பது ஏரிகள், புகழ்பெற்ற சுற்றுலாத்தளங்கள், பல்வேறு புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள், துணி தயாரிப்பு ஆலைகள், மேன்பொருள் ஏற்றுமதி, கனரக தயாரிப்பு, தானியங்கி பாகங்கள் தயரிப்பு என பல்வேறு தொழில்களில் வளர்ச்சியை தன்னகத்தே கொண்டுள்ள நகரம் கோவை ஆகும்.

இதுவரை தமிழ்நாட்டில் 181 அரசுப்பொருட்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. தற்போது நடைபெறுவது 182-வது அரசுப்பொருட்காட்சி ஆகும். கோவையில் மட்டும் 31 அரசுப்பொருட்காட்சிகள் நடைபெற்றுளன. இன்று தொடங்கிடும் 32வது அரசுப்பொருட்காட்சியினை பொதுமக்கள் அதிகளவில் கண்டு பயனடைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என பேசினார்.



இதனைத்தொடர்ந்து, 36 பயனாளிகளுக்கு ரூ.7.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ ஆகியோர் வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டிமடை சண்முகம், அம்மன்கே. அர்ச்சுணன், கஸ்தூரிவாசு, செய்தித்துறை கூடுதல் இயக்குநர் உல.ரவீந்திரன், வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் கு.ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...