கேஎம்சிஎச் மருத்துவமனையில் ஆட்டிசம் குறைபாட்டிற்கான சிறப்பு ஆலோசனை முகாம்

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு கேஎம்சிஎச் மருத்துவமனையின் ஆக்குபேஷனல் தெரபி பிரிவின் சார்பில்  ஏப்ரல் 24ம் தேதி 29ம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆட்டிசம் குறைப்பாட்டிற்கான சிறப்பு ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் குழந்தைகளின் குறைகளை கண்டறிந்து அக்குறைபாடுகளுக்கான முறையான சிகிச்சைகளும், ஆலோசனைகளும், வழிமுறைகளும் வழங்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு மன இறுக்கம் எனப்படும் ஆட்டிசம் குறைபாடு இருப்பதை கண்டறியப்படுவதற்கு, குழந்தை வளர்ச்சியில் அவர்களுக்கு சிரமம் இருப்பதை வைத்து கண்டறியலாம். அவற்றுள் சில மொழித்திறன் தாமதமாக வருகிறது அல்லது முறையாக இல்லை, பெயரை அழைக்கும்பொழுது கவனிப்பதில்லை. கிளிப்பிள்ளை போன்ற பேச்சு அதாவது நாம் சொல்வதை அப்படியே திரும்ப சொல்வது, பேச்சுத்திறன் வளர்ந்து திடீரென்று குறைதல், ஒரே செயலை திரும்ப திரும்ப செய்தல், வழக்கமான செயலில் மாற்றம் ஏற்பட்டால் முரண்டு பிடித்தல், வழக்கத்திற்கு மாறான உணர்வு சார்ந்த ஆர்வங்கள், மிக குறுகிய விஷயங்களிலேயே திரும்ப திரும்ப ஈடுபடுதல், சுழலும் பொருட்களை அடிக்கடி நோட்டம்விட்டுக் கொண்டிருத்தல், வலி உணர்வுக்கு வழக்கத்திற்கு மாறான சகிப்புத்தன்மை, இன்னொரு நபர் புன்னகைப்பதைப் பார்த்து புன்னகைக்காமல் இருப்பது, ஒருவரை பார்க்கும்பொழுது கண்ணோடு கண் பார்க்காமல் இருப்பது, மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் இருத்தல், அர்த்தமற்ற விளையாட்டில் ஈடுபடுதல், அன்பு பாச உணர்வுகள் செய்கைகள் குறைந்து இருத்தல் உள்ளிட்டவை ஆட்டிசம் குறைபாடுகளுக்கான அறிகுறிகள் ஆகும்.

இதுபோன்ற மேற்காணும் ஏதேனும் அறிகுறிகள் உங்கள் குழந்தையிடம் தென்பட்டால் பரிசோதனைக்காக கேஎம்சிஎச் மருத்துவமனையின் நடைபெறும் சிறப்பு ஆலோசனை முகாமில் பங்கேற்கலாம். இந்த சிறப்பு முகாமில் குழந்தைகளின் குறைகளை கண்டறிந்து அக்குறைபாடுகளுக்கான முறையான சிகிச்சைகளும், ஆலோசனைகளும், வழிமுறைகளும் வழங்கப்படுகிறது. 

கேஎம்சிஎச் மருத்துவமனையின் ஆக்குபேஷனல் தெரபி துறையில் ஆட்டிசத்திற்கான சிகிச்சை 1995-ஆம் ஆண்டில் இருந்து  வழங்கப்படுகிறது. ஆக்குபேஷனல் தெரபியில் ஆட்டிசம் குறைபாட்டிற்காக கொடுக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மேலும் அறிய ஜாதா மிஸ்ஸல், துறை தலைவர், ஆக்குபேஷனல் தெரபி துறை, கோவை மெடிக்கல் சென்டர் அண்ட் ஹாஸ்பிடல், தபால் எண்- 3209, அவிநாசி ரோடு, கோவை- 641 014 என்ற முகவரியிலும் அல்லது 0422-4323749, 4323627 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்புகொள்ளலாம்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...