கோவை அரசு பொருட்காட்சியை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை

கோவை வஉசி மைதானத்தில் நடைபெறும் அரசு பொருட்காட்சியை ஜூலை 14 வரை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் காரணமாக தாமதமாக தொடங்கிய காட்சியில் மக்கள் வருகை குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவையில் தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில் வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு அரங்கம் அமைத்துள்ள வியாபாரிகள் சார்பில், தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்குனருக்கு அண்மையில் மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த மே 29 அன்று தொடங்கிய இப்பொருட்காட்சி ஜூலை 12 அன்று நிறைவடைய உள்ளதாகவும், இதனை ஜூலை 14 வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கமாக கோடை விடுமுறை காலத்தில் நடைபெறும் இந்த பொருட்காட்சி, இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தாமதமாக தொடங்கியது. தற்போது கோடை விடுமுறை முடிந்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மக்களின் வருகை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சுமார் 1.50 லட்சம் பேர் மட்டுமே பொருட்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர். கடந்த ஆண்டு 2.50 லட்சம் பேர் வருகை புரிந்ததாகவும், அதற்கேற்ப வருவாய் இருந்ததாகவும், ஆனால் தற்போது வருவாய் அளவும் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பொருட்காட்சியில் அரசின் நலத்திட்டங்களை மக்கள் கண்டுகளித்து வருவதோடு, பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தி வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியை நீட்டிப்பதன் மூலம் மேலும் அதிக மக்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...