கோவை விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் குடியிருப்பு பகுதியில் மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் பலி

விசாரணையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அங்கிருந்த மின்சார வயர்கள் சேதப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை சரவணம்பட்டி துடியலூர் சாலையில் விமானப்படைக்கு சொந்தமான ராமன் விகார் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் குடும்பங்கள் அனைவரும் விமானப்படையில் பணிபுரிந்தவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள். 

இந்நிலையில் இங்கு d2 301 என்ற வீட்டில் குடியிருக்கும் பிரசாந்த் ரெட்டி என்பவரின் மகன் ஜியானஸ் ரெட்டி (4) மற்றும் A3 401 என்ற வீட்டில் குடியிருக்கும் பாலசுந்தர் என்பவரின் மகள் வியோமா ஆகியோர் தங்களது குடியிருப்பின் அருகில் கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்காவில் விளையாடச் சென்றுள்ளனர். 

அங்குள்ள, குடியிருப்பில் இருந்த மற்ற குழந்தைகளும் அங்கு விளையாடச் சென்றுள்ளனர். அப்போது சறுக்கு விளையாட்டு விளையாடும் பகுதிக்குச் சென்ற குழந்தைகள் இருவரையும் சறுக்கு விளையாட முயன்ற போது மின்சாரம் தாக்கியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து மின்சார தாக்குதலுக்கு உண்டான இரு குழந்தைகளும் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அருகில், இருந்தவர்கள் அவர்களை உடனடியாக காப்பாற்றி தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். 

ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தைகள் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே அங்கிருந்த மின்சார ஒயர்கள் சேதப்பட்டு இருப்பது அங்கு வேலை செய்யும் சிவா என்ற எலக்ட்ரீஷனுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் குடியிருப்பின் தலைவர் என்எல்.நாராயணன் என்பவர் அதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை என குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். 

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரு குழந்தைகளின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...