காங்கேயத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் வாக்கு சேகரிப்பு

மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு பொதுமக்கள் நாள் குறித்து விட்டனர் என்றும், அம்மா காலத்தில் செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது என்றும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசினார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் கீரனூர் மற்றும் சாவடிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்விற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜ் தலைமை தாங்கினார்.



அதிமுக ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் பேசுகையில் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு பொதுமக்கள் நாள் குறித்து விட்டனர் என்றும், நமது அம்மா காலத்தில் செயல்படுத்திய அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது என்றும், மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, மிதிவண்டி, பொதுமக்களுக்கு இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டம், பெண்கள் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது எனவும் குறிப்பிட்டார்.



மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா அரசு வழங்கிய நலத்திட்ட உதவிகளை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். மதுபான கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு மேலும் புதிய மதுபான கடைகளை திறந்து வைத்துள்ளனர். இப்போது புதிதாக குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய போதை பொருள்களை மிட்டாய்களில் கலந்து விற்பனை செய்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். அடுத்த தலைமுறைகளை கெடுக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டுக் கொண்டுள்ளது. திமுக அரசு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தாமல் பொதுமக்களின் அடிப்படைத் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட வரிகளை அதிகப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், மறவா பாளையம் ஊராட்சி செயலாளர் பி.கே.பி சண்முகம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...