மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.20.64 கோடி மதிப்பிலான இடங்கள் மீட்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.20.64 கோடி மதிப்பிலான 2.56 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியிலுள்ள பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் கண்டறிந்து, விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 4.03.2017 மற்றும் 25.03.2017 ஆகிய இரு நாட்களில் மட்டும் மாநகராட்சியிலுள்ள  ஐந்து மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலம் ஆகிய வார்டு பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.20.64 கோடி மதிப்பிலான 2.56 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலம், வடவள்ளி, வார்டு-16, ஸ்ரீராம் அவன்யூவில், பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.6.90 கோடி மதிப்பிலான 68.87 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், துடியலூர், வார்டு-3, சுப்ரமணியம்பாளையத்தில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.10 கோடி மதிப்பிலான 13.77 சென்ட் அளவிலான இடங்களும், தெற்கு மண்டலம், குறிச்சி, வார்டு-99, அன்பு நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 5 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.

அதேப்போன்று, கிழக்கு மண்டலம், விளாங்குறிச்சி, வார்டு-32, சிவராம் நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 153 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், ராமநாதபுரம், வார்டு-74, டாக்டர்.முருகசாமி நகரில் சுமார் ரூ.1.40 கோடி மதிப்பிலான 12.82 சென்ட் அளவிலான இடங்களும் மற்றும் டாக்டர்.முருகசாமி நகரில் சுமார் ரூ.0.24 கோடி மதிப்பிலான 2.16 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.20.64 கோடி மதிப்பிலான 2.56 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...