விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்காத வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

மேலும் பெரிய தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் குட்டி பெண் யானையை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். வனவிலங்குகள் விவசாய நிலங்களை நாசம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் விவசாய குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வனத்துறை அதிகாரிகள் வராமல் விவசாயிகளை வனத்துறையினர் அவமதித்துள்ளதாக விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் தொகை போதுமானதாக இல்லை எனவும், கூடுதல் நிவாரண தொகை வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளதாக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கந்தசாமி தெரிவித்தார்.

Newsletter

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...