தமிழக அரசுக்கு எதிராக தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தவறிவிட்டதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் அண்ணா சிலை அருகே திமுக அரசை கண்டித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களை காப்பாற்ற தவறியதாக கூறும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு சூழலை தமிழக அரசு எச்சரிக்கையுடன் கையாண்டு இருக்க வேண்டும் என்றும், எச்சரிக்கை முன்னேற்பாடு நடவடிக்கைகளை சரியாக எடுத்து இருக்காத அரசை கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மக்களை காப்பாற்ற தவறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு வராமல் அர்ஜுன் சம்பத் அவர் வந்த காரில் நிற்காமல் சென்று விட்டார்.



அதன் பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சியினரை தாராபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதனால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...