கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.11.89 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.11.89 கோடி மதிப்பிலான 1.49 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர்  தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் கண்டறிந்து, விரைவில் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுவரை மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களிலிருந்து கடந்த 2016 நவம்பர் மாதம் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.64.70 கோடி மதிப்பிலான 5.34 ஏக்கர் அளவிலான இடங்களும, டிசம்பர் மாதம் சுமார் ரூ.55.45 கோடி மதிப்பிலான 3.77 ஏக்கர் அளவிலான இடங்களும் மற்றும் 2017 ஜனவரி மாதம் சுமார் ரூ.26.2 கோடி மதிப்பிலான 2.72 ஏக்கர் அளவிலான இடங்களும், பிப்ரவரி மாதம் சுமார் ரூ.71.95 கோடி மதிப்பிலான 7.66 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களும் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டும், மீட்கப்பட்ட இடங்களில் பூங்கா அமைத்தல், தோட்டங்கள் அமைத்தல், மரம் செடிகள் நடுதல் போன்ற பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அதனை தொடர்ந்து 17.03.2017 மற்றும் 18.03.2017 ஆகிய இரு நாட்களில் மட்டும் மாநகராட்சியிலுள்ள  நான்கு மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய வார்டு பகுதிகளில் மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.11.89 கோடி மதிப்பிலான 1.49 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேற்கு மண்டலம், கவுண்டம்பாளையம், வார்டு-5, கண்ணையா நகர், தெற்கு பேஸ் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 31 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், சரவணம்பட்டி, வார்டு-28, மீனாட்சி நகர் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.25 கோடி மதிப்பிலான 25 சென்ட் அளவிலான இடங்களும், தெற்கு மண்டலம், குனியமுத்தூர், வார்டு-92, ஜெயகேந்திரா அகிலாண்டம் சிட்டியில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.0 கோடி மதிப்பிலான 20 சென்ட் அளவிலான இடங்களும், கிழக்கு மண்டலம், காளப்பட்டி, வார்டு-33, அசோக் நகர் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.4.4 கோடி மதிப்பிலான 44 சென்ட் அளவிலான இடங்களும், மற்றும் வார்டு-35, காலேஜ் நகர் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.1.74 கோடி மதிப்பிலான 29 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம் சுமார் ரூ.11.89 கோடி மதிப்பிலான 1.49 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...