ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "விளையாட்டு விழா"

கோவை, குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "விளையாட்டு விழா" இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கலால்வரித்துறையின் ஆய்வாளர் மற்றும் தமிழக தடகள விளையாட்டு அமைப்பின் பொருளாளர் சி.லதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையற்றினார்.

அப்போது அவர் பேசுகையில்; விளையாட்டு வீரராக வருவதற்கு வயது தடையில்லை. எந்த வயதிலும் விளையாட்டில் நுழைய முடியும். விளையாட்டு ஒழுக்கத்தினை, கட்டுப்பாட்டினை கற்றுக் கொடுக்கும். அதுமட்டுமின்றி பல்வேறு வாய்ப்புகளை நமக்கு அளிக்கும். இளைஞர்கள் விளையாட்டுத் திறனை வளர்க்க வேண்டும். உடல், மன ஆரோக்கியதிற்க்கு விளையாட்டு பெரிதும் உதவும். கல்வி நிறுவனங்கள் விளையாட்டுத்துறை வளர்ச்சியில் முக்கிய பங்கினை வகிக்கின்றன. எத்துறையிலும் சாதனை புரிய விளையாட்டு முக்கிய பங்கினை வகிக்கின்றன. அதேபோல பல்வேறு வேலை வாய்ப்பினையும் கொடுக்கின்றது எனக் கூறினார்.

இவ்விழாவில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவம் செயப்பட்டனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், இவ்வாண்டு விளையாட்டுக்கான மொத்த சாம்பியன் பட்டத்தினை பி.பி.ஏ(சி.ஏ) துறையும், இரண்டாம் இடத்தினை பி.எஸ்.சி(சி.எஸ்) துறையும் பெற்று சுழற்கோப்பையினை பெற்றனர். தடகள விளையாட்டில் பி.காம் துறை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. இதில், கோவை மாவட்ட தடகள விளையாட்டுப் பயிற்சியாளர் சீனிவாசன், கல்லூரி முதல்வர் பாபாஞானக்குமார், விளையாட்டுத் துறையின் இயக்குநர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...