தொழில்துறை இடம் வழங்கினால் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு கட்டித்தர அரசு தயார் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதி

தொழில்துறையினர் இடம் அளித்தால் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டித்தர தமிழக அரசு தயாராக இருப்பதாகவும், மின் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதாக திருப்பூரில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: மின் கட்டண உயர்வு குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.



திருப்பூர் மாவட்டம் கொங்குநகர் அடுத்த அப்பாச்சி நகரில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம் உள்ளது. இந்த கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, திறப்பு விழா இன்று நடந்தது.



தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது,



திருப்பூரில் தொழில்பேட்டை அமைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில்பேட்டைகளை அமைத்தால் மேலும் தொழில் வளர்ச்சி அடையும். தமிழ்நாடு தொடர்ந்து பின்னலாடை உற்பத்தியில் சிறந்து விளங்கி வருகிறது.

இருப்பினும் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தொழில் துறையினர் ’டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்’ பக்கம் இங்குள்ள தொழில்துறையினர் நகர வேண்டிய தருணம் இது எனவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத்தில் தள்ளாடுவதால், அந்த ஆர்டர்களை நாம் பெறுவதற்கு இது உதவிகரமாக இருக்கும். டெக்ஸ்டெக், மெடிடெக், ஸ்போர்ட்ஸ் டெக், ஆக்ரோ டெக் ஆகியவற்றில் எதிர்காலம் சிறக்கும்.

தொழில்துறையின் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தமிழ்நாடு முதல்வர் தனி கவனம் செலுத்த சொல்லி உள்ளார். ’டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ்’ மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான புதிய ஆலோசனைகளை தொழில்துறை முழுமனதோடு வரவேற்கிறது.

தொழிலாளர்களுக்கு 5000 வீடுகள் கட்டித்தர கோரிக்கை வைக்கின்றனர். இடம் கிடைத்தால் நிச்சயம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு ட்ரில்லியன் இலக்கை நோக்கி தமிழக முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதற்கு திருப்பூர் தொழில் துறையினர் உதவிகரமாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



பின்னலாடை துறை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் திருப்பூர் தொழில் துறையினர் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையான கோரிக்கைகள் ஒன்றிய அரசை சார்ந்ததாகவே உள்ளது.

அதனை உடனடியாக நிறைவேற்ற கோரி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். திருப்பூர் பின்னலாடை துறையை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உறுதுணையாக இருந்து தொழில்துறை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல அனைத்துவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

மின் கட்டண உயர்வு தொடர்பான கேள்விக்கு, மின் கட்டண உயர்வு ஒன்றிய அரசின் கொள்கை, இதையும் அவர்கள் தான் பரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...