கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.40,000 அபராதமும் Additional District Judge (EC Court) நீதிமன்றம் விதித்துள்ளது. 2019ல் C3 சாய்பாபா காலனி காவல் நிலைய போலீசார் ரோந்து பணியின்போது 1.100 கிலோ உலர் கஞ்சா மற்றும் ரூ.7,500 ரொக்கத்துடன் ஷமிலா பேகம் மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்திருந்தனர். முதலாம் எதிரி ஷமிலா பேகத்திற்கு ஏற்கெனவே 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கை சிறப்பாக கையாண்ட அதிகாரிகளை காவல் ஆணையர் Dr.N.கண்ணன் பாராட்டினார்.
Coimbatore: கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரியான தினேஷுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.40,000 அபராதமும் Additional District Judge (EC Court) நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 12.08.2019ம் தேதி, கோவை MTP ரோடு, MGR மார்க்கெட் அருகே C3 சாய்பாபா காலனி காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த ஷமிலா பேகம் (38), W/o. அப்துல்லா மற்றும் தினேஷ் (25), S/o. பாலன் ஆகியோரிடமிருந்து 1.100 கிலோ உலர் கஞ்சா மற்றும் ரூ.7,500 ரொக்கம் கைப்பற்றப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் முதலாம் எதிரி ஷமிலா பேகத்திற்கு 06.11.2023 அன்று Additional District Judge (EC Court) நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1,00,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கின் இரண்டாம் எதிரியான தினேஷுக்கு 17.09.2026 அன்று Additional District Judge (EC Court) நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு, வழக்கு ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த புலனாய்வு அதிகாரி மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோரை காவல் ஆணையர் Dr.N.கண்ணன், இ.கா.ப. அவர்கள் வெகுவாக பாராட்டினார்.