கோவையில் சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் - மேயர், மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தனர்!

கோவை மாநகராட்சி சார்பில் சரவணம்பட்டி பகுதியில் 4, 10, 11 மற்றும் 21 ஆகிய 4 வார்டுகளுக்கு உட்பட்ட மக்களுக்கான சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் இன்று நடைபெற்றது. இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் துவக்கி வைத்து மக்களுக்கு சொத்து வரி திருத்த புத்தகங்களை வழங்கினர்.



கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் நடைபெற்ற சிறப்பு சொத்து வரி திருத்த முகாமை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் துவக்கி வைத்தனர். 



கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் சரவணம்பட்டி பகுதியில் வார்டு எண் 4, 10, 11, 21 ஆகிய நான்கு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களுக்காக சிறப்பு சொத்து வரி திருத்த முகாம் நடைபெற்றது.



இம்முகாமில் சொத்து வரி மாற்றம் செய்தல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இந்த முகாமை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துவக்கி வைத்து கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சொத்து வரி திருத்த புத்தகங்களை வழங்கினர். தொடர்ந்து இம்முகாம் அப்பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி துணை ஆணையாளர் சிவக்குமார், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, பூங்கொடி, சிரவை சிவா, உதவி ஆணையர் மோகனசுந்தரி உதவி வருவாய் அலுவலர் மதிவண்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.



இதுபோன்ற சிறப்பு சொத்துவரி முகாம்கள் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...