சாலையில் மிரண்டு ஓடிய ரேக்ளா வண்டி மாடு - கோவையில் கணவன் கண்முன்னே மனைவி பலி!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பிரிவு அருகே சாலையில் ரேக்ளா வண்டி சென்றுக் கொண்டிருந்தது. மாடு மிரண்டு, சாலையின் குறுக்கே ஓடியதால், பின்னால் வந்த இருசக்கர வாகனம், ரேக்ளா வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் புவனேஸ்வரி என்ற பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: தொண்டாமுத்தூர் அருகே ரேக்ளா வண்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.



கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பிரிவு அருகே ரேக்ளா வண்டி ஓட்டி வரும்போது மாடு மிரண்டு, திடீரென சாலையின் வலதுபுறமாக ஓடியது. இதனால், பின்னால் வந்த இருசக்கர வாகனம், ரேக்ளா வண்டி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் குப்பேபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (32) என்பவரது மனைவி புவனேஸ்வரி (25) சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரேக்ளா வண்டி யார் ஓட்டி வந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சி அடிப்படையில் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளிவந்து காண்போரை இதயம் கனக்க செய்கின்றது.

Newsletter

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...