தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கண்டு கண்ணீர் வடித்த வானம்!

தமிழகத்தில் 6வது நாளாக தொடரும் இளைஞர்களின் ஜல்லிக்கட்டு தொடர் போராட்டதில் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில்  கனமழை பெய்தது. எனினும் போராட்டக்காரர்கள் மழையினை பொருட்படுத்தாமல் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை வஉசி மைதானத்தில் நேற்று விடிய விடிய கொட்டிய மழையிலும் தங்களது போராட்டத்தை கைவிடாமல் நடத்தி வருகின்றனர்.



சனிக்கிழமை நாளான நேற்று பள்ளிகள் விடுமுறை என்பதால் கோவை வஉசி மைதானத்தில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்கள். நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டத்தில் இன்று பெண்களின் கூட்டம் அலைமோதியது. போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகையில் இரவில் தீடீர் மழை குறுக்கிட்டதால், மழையினையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் போராட்டத்தை கைவிடாமல் கோஷங்களை எழுப்பியும் போராட்டம் நடத்தினர்.



மழையில் பொதுமக்கள் போராடுவதை கண்டு தன்னார்வலர்கள் பலர் குடைகள் மற்றும் தார்பாய்கள் கொடுத்து உதவினர். கடும் பனியிலும், மழையிலும் போராட்டத்தை கைவிடாமல் நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் பெய்த திடீர் மழையின் காரணமாக இளைஞர்கள் பலர் அவிநாசி சாலையில் உள்ள சாலை ஓரங்களில் படுத்தும் வருகின்றனர்.



மேலும், நேற்று மாலை தமிழக முதல்வர் மற்றும் தமிழக ஆளுநர் முயற்சியில் ஜல்லிகட்டிற்கு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனை அடுத்து இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின் இந்த அவசர சட்டம் நிரந்தரம் அல்ல என்றும் தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்க்கு நிரந்தர சட்டம் வரும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என தமிழக முழுவதும் உள்ள போராட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.



Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...