மேவன் செயற்கைக்கோள் வேகம் அதிகரிப்பு

செவ்வாய் கிரகம் பற்றி ஆராய அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மேவன் என்ற செயற்கைக்கோளை அனுப்பியது. இப்போது அந்தச் செயற்கைக்கோளின் திசைவேகத்தை வினாடிக்கு 0.4 மீட்டர் அதிகரித்துள்ளது.

செவ்வாயின் வளிமண்டலம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மேவன் விண்கலம் நாசாவால் அனுப்பப்பட்டது. விண்கலத்தின் வேகத்தைக் கூட்டுவதற்காக அதில் உள்ள எஞ்சின் இயங்க வை‌க்கப்பட்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். இதன்மூலம் மணிக்கு கூடுதலாக ஒரு மைல் தூரம் பயணிக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதுபோன்று விண்கலத்தின் வேகத்தைக் கூட்டுவது, செவ்வாய் கிரகத்துக்கு ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்களுக்கு வேண்டுமென்றால் சாத்தியம் ஆகலாம். ஆனால் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் ஏவப்படும் செயற்கைக்கோள்களுக்குச் சாத்தியமில்லை என நாசா விஞ்ஞானியான பிரையன் வீடேன் கூறியுள்ளார். இதற்கு காரணம் செவ்வாய் கிரகத்துக்கு ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகம் எனவும் கூறப்படுகிறது. அண்மையில் மேவன் விண்கலத்தின் பாதையை நாசா மாற்றி அமைத்துள்ளது. அதுபோன்று பூமியில் ஏவப்படும் விண்கலத்தின் பாதையை, மாற்றியமைப்பது சாத்தியமில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...