தமிழில் ஸ்கைப் லைட் செயலி: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம்

குறைந்த அளவு இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்கும் வகையிலான ஸ்கைப் லைட் செயலியை இந்திய பயனாளர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.

மும்பையில் நடந்த விழாவில் ஸ்கைப் லைட் செயலியை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சத்யா நாதெள்ளா வெளியிட்டார். முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் இந்த செயலி, குறைவான இணைய வேகம் கொண்ட மொபைல் போன்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2ஜி மற்றும் 3ஜி அலைவரிசையிலும் சிறப்பாக இயங்கும் இந்த ஸ்கைப் லைட் செயலி, குறைவான அளவு டேட்டாவைப் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் ஸ்கைப் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்கைப் லைட் செயலியின் செட்டிங்ஸ் உள்ளிட்டவைகளை ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கையாள முடியும் என்ற நிலை மாறி, பிராந்திய மொழிகளிலேயே அந்த செயலியைக் கையாள முடியும். இந்த செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...