ஆளில்லா ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது

அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா ஏவிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது.

விண்வெளியை ஆய்வு செய்ய சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நாசா நிறுவியுள்ளது. அங்கு பல விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு பொருட்கள் உட்பட தேவையான பொருட்களை வைத்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் ஃபால்கான் 9 எனும் ஆளில்லா விண்கலம் நேற்று இரவு விண்ணில் ஏவப்பட்டது.

ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் என்ற இடத்தில் இருந்து இந்திய நேரப்படி நேற்று இரவு 8:8 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த பயணம் வெற்றிகரமாகியிருந்தால் 22 ஆம் தேதி விண்வெளி மையத்தை சென்றடைந்திருக்கும். ஆனால் விண்ணில் செலுத்திய 10 நிமிடங்களில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்து சிதறியது. தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ராக்கெட் வெடித்ததாக கென்னடி விண்வெளி மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...