புதிய வகை சூரிய மின் தகடு!

சூரிய மின் தகடுகளில், சூரிய ஒளியையும், வெப்பத்தையும் மின்சாரமாக மாற்ற, 'பெரோவ்ஸ்கைட்' என்ற ஒரு தாதுப் பொருள் பயன்படுகிறது. அண்மையில் ஒளி, வெப்பத்தை மட்டுமல்ல, அழுத்த விசையையும் மின்சாரமாக மாற்றும், புதிய பெரோவ்ஸ்கைட்டை, பின்லாந்தைச் சேர்ந்த, ஒலுாலு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். இன்று பரவலாக பயன்படுத்தப்படும் பல கையடக்க சாதனங்களில், மூன்று குணங்கள் கொண்ட பெரோவ்ஸ்கைட்டிலுள்ள எலக்ட்ரான்கள், சூரிய ஒளியில் உள்ள போட்டான்களால் துாண்டப்பட்டு, சிறிதளவு மின்சாரம் உற்பத்தியாகிறது. 

அதே போல, வெப்ப சக்தியாலும் பெரோவ்ஸ்கைட்டின் எலக்ட்ரான்கள் துாண்டப்பட்டு, மின்சாரம் உண்டாகிறது. பின்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள புதிய வகை பெரோவ்ஸ்கைட்டுகள், இவ்விரண்டினாலும் துாண்டப்படுவதோடு, வேறு பொருட்களால் அழுத்தப்படும் போது உண்டாகும் விசையாலும் துாண்டப்பட்டு, மின்சாரத்தை வெளியிடுகின்றன. இதை இயற்பியலில், 'பைரோ எலக்ட்ரிக்' விளைவு என்பர். இந்த கண்டுபிடிப்பு, 'அப்ளைடு பிசிக்ஸ் லெட்டர்ஸ்' என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...