விரைவில் வருகிறது யூரியா மின்கலன்!

மலிவான, சிறிய, பெரிய மின்கலன்களை உருவாக்குவதற்கான, ஆராய்ச்சி உலகெங்கும் போட்டி போட்டுக்கொண்டு நடைபெறுகிறது. மலிவான மூலப் பொருட்கள் கிடைத்தால், மின்கலன்களும் மலிவு விலைக்கு தயாரிக்க முடியும். எனவே, அண்மையில், விலை மலிவான யூரியாவை அடிப்படையாக கொண்ட, மின்கலனை தயாரித்திருக்கின்றனர், அமெரிக்காவிலுள்ள, ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள். இந்த யூரியா, மலிவாக எங்கு கிடைக்கும்? மனித சிறுநீரிலிருந்து தான்! ஏற்கனவே, 2015ல், அலுமினிய அயனி மின்கலன் ஒன்றை, இதே ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள் உருவாக்கியிருந்தனர். ஆனால், இதற்கு தேவையான அயனி திரவத்தை தயாரிக்க அதிக செலவாகும். ஆனால், அதைவிட யூரியாவைக் கொண்டு இயங்கும் மின்கலன்கள், 100 மடங்கு சிக்கனமானது என, விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். வழக்கமான லித்தியம் அயனி மின்கலன்கள் அளவுக்கு, யூரியா மின்கலன்களால் மின்சாரத்தை தேக்கி வைக்க முடியாது. என்றாலும், யூரியா மின்கலன் வேகமாக மின்னேற்றம் பெருவதோடு, அதிக காலத்திற்கு மின்சாரத்தை தேக்கி வைத்திருப்பதாக, அதன் கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே, வீடு, அலுவலகங்களில் பயன்படும் பெரிய மின்கலன்களாக, யூரியா மின்கலன்களை பயன்படுத்த முடியும். இந்த கண்டுபிடிப்பு, 'புரசீடிங்ஸ் ஆப் தி நேஷனல் அகாடமி' இதழில் வெளியாகி உள்ளது.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...