பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துகிறது ட்விட்டர்.!

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு 21 மார்ச் 2006 அன்று நிறுவப்பட்ட ஓர் குமுக வலையமைப்புச் சேவையே ட்விட்டர் ஆகும்.

இது இன்றைக்கு படிப்படியாக வளர்ந்து உலகம் முழுமைக்கும் 310 இயங்கு நிலையிலுள்ள பயனர்களைக் கொண்டுள்ளது.

இணையதளம் வழியே தமது கருத்துக்களை பயனர்கள் சிறிய வார்த்தைகளினுடே எளிதாக பகிர்ந்து கொள்வதற்க இந்த சமூக வலைத்தளம் மிகவும் பிரபலமான ஒன்று.பேஸ்புக் எனும் சமூக வலைத்தளத்தினைப் போலவே இதுவும் இன்றைக்கு அதிக பயனாளர்களை தங்களது கருத்துக்களை அவர்கள் எளிதாக பகிர்ந்துகொள்வதற்கான அடித்தளம் அமைத்துக்கொடுத்துள்ளது.

சமூக வலைத்தளங்கள்:

இப்போதைய காலகட்டத்தில் தங்களது மொபைல் போன்களின் வழியே சமூகவலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் அதிகரித்து விட்டனர்.தொலைவிலிருப்போரை எளிதில் தொடர்புக்கொள்ளக்கூடிய வசதி,உலகத்தின் எங்கோ ஓர் மூலையில் நடைபெறுகிற நிகழ்வுகளை உடனடியாக நாம் தெரிந்துகொள்ளக்கூடிய வசதி போன்ற காரணங்களால் சமூகவலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்தது.

தேர்தல் ஆணையம் தேர்தல்களில் வாக்கு சதவிகிதத்தினை அதிகரிக்க வேண்டி இத்தகைய சமூக வலைத்தளங்கள் வழியே விழிப்புணர்வு ஏற்படுத்துவதனைக் கொண்டே சமூகத்தில் இவற்றின் தாக்கத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்

கருத்துக்கள்:

இன்றைக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக நன்மையையும் தீமையையும் சேர்த்தே நடைபெறுகின்றன.
பொதுவெளியில் தங்களது கருத்துக்களை எளிதாக பகிர்ந்துகொள்கிற வாய்ப்பினை இவை நமக்கு அளித்தாளும் எவர் என்றே அறியாதோரும் நம்மை தொடர்புகொள்ளக் கூடிய அம்சங்கள் உள்ளிட்டவற்றை வழங்குகின்றன.
இதன் வாயிலாக தேவையற்ற பிரச்சனைகளும்,மனரீதியா அழுத்தங்களும் உண்டாகின்றன.ஆக்கப்பூர்வமான கருத்துக்களும் விமர்சனங்களும் இதன் பயன்பாட்டாளர்களால் பொதுவெளியில் அரசினையோ,அதன் செயல்பாடுகளையோ நோக்கி வைக்கப்பட்டாலும் தனிமனிதர்களை இழிவு படுத்துகிறவகையில் விமர்சனங்களும் கருத்துக்களும் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல.

நீக்கப்பட்ட கணக்குகள்:

தனது வலைதளத்தில் நிறம், தேசியம், மொழி, இனம், அரசியல் சார்பு, உள்ளிட்டவைகளைக் காரணமாக் கொண்டு பிறரை விமர்சித்த 360,000 ட்விட்டர் கணக்குகளை தனது வலைத்தளத்தில் இருந்து நீக்கியது ட்விட்டர்.

புதிய பாதுகாப்பு வழிமுறைகள்:

இதன் காரணமாக ட்விட்டர் இன்றைக்கு தனது பயனாளர்களுக்காக புதிய பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.சேப் சர்ச், உள்ளியிட்ட புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது ட்விட்டர்.மேலும் தொடர்பில்லாத கணக்குகளின் ட்விட்டுகளை பிறருக்கு காட்டாதவகையிலும்,மேலும் பிற கணக்குகளை முடக்கக்கூடிய வகையிலும்,மியூட் செய்யக்கூடிய வகையிலும் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

தொடர வேண்டும்:

ட்விட்டர் பயனாளர்கள் இது குறித்து கூறுகையில்,இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் தொடரவேண்டுமென எனவும் மேலும் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தவேண்டுமெனவும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...