குறைந்த எடை நிறைந்த சக்தி!

உலகிலேயே மிக மெல்லிய, 'பியூயல் செல்' எனப்படும் மின் உற்பத்திக் கலனை உருவாக்கியிருக்கிறது 'மை எப்.சி., பவர்' என்ற நிறுவனம். 'லாமினா' என்ற மின் உற்பத்திக் கலன், ஸ்மார்ட்போன், டேப்லட் போன்ற சாதனங்களுக்கு உடனடி மின் சக்தி தர பயன்படும். முன்பு மேசைக் கணினிக்கு இருந்த தகவல் அலசும் திறனை, இன்று சிறிய ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட்களுக்குள் திணிக்க ஒரு பெரும் போட்டியே நடக்கிறது.

இந்த ஆற்றலுக்கு தீனி போட, அதிக மின்சாரத்தை தரும் மின்கலன்களை உருவாக்கவும் ஒரு போட்டி உருவாகிஇருக்கிறது. இதற்கு லாமினா முன்வைத்துள்ள தீர்வுதான் மெல்லிய மின் உற்பத்திக் கலன். வழக்கமாக உங்கள் ஸ்மார்ட்போன்களில் இருப்பவை மின்கலன்களே. அவை மின்சாரத்தை தேக்கி வைத்திருப்பவை.

இதனால் தேக்கிய மின்சாரம் தீர்ந்து போனால், இவற்றை அடிக்கடி மின்னேற்றம் செய்யவேண்டும். ஆனால், மின் உற்பத்திக் கலன்கள், பெயருக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்பவை. வேதி வினை மூலம் ஹைட்ரஜனை உருவாக்கி, அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்துகொள்ளும் வகையில் இக் கலன்கள் உருவாக்கப்படுகின்றன. லாமினாவின் எடை மிகக் குறைவு என்பதாலும், குறுகிய இடத்தை அடைப்பதாலும் விரைவில் இது போன்ற தொழில்நுட்பங்கள் மின்கலன்களை காலாவதியாக்கிவிடும் என்று மின்கலன் துறை வல்லுனர்கள் ஆரூடம் சொல்கின்றனர்.

Newsletter

உடலைப்பற்றிய வியக்கத்தகு உண்மைகள் !

ஒரு நாளைக்கு சராசரியாக ஆண்களுக்கு 40 தலைமுடிà®...

தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் !

தக்காளியை நாம் காய்கறிகளின் லிஸ்ட்டில் வைதà¯...